திங்கள், 15 மே, 2017

“இந்தியாவில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்…’

மதத்தின் பெயரால் நாடு முழுவதும் வேற்றுமை உணர்வு அதிகரித்துவருகிறது. இந்தியாவில் பிறந்ததற்கே வெட்கப்படுகிறேன்’ என்று பா.ஜ.க அரசைச் சாடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
கொல்கத்தாவில்  புத்த ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வின் பெயரைக் குறிப்பிடாமல், கடுமையாக விமர்சித்தார். மேலும்,

‘இந்தியாவில், மதத்தின் பெயரால் பயங்கரவாதம் செய்துவருகின்றனர். மதத்தின் பெயரில் நடத்தும் வன்முறையால், மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துகின்றனர். இந்தக் காரணத்துக்காக, நான் இந்தியாவில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்.

யாரின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன். மேற்கு வங்கம் பயப்படாது. மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்கள் அமைதிகாத்து வருகின்றன. ஆனால், மேற்கு வங்காளம் யாருக்கும் அஞ்சாது. இங்கு நடப்பது மக்கள் ஆட்சி, மக்களுக்கான ஆட்சி. மத அரசியலுக்கு இந்த மண்ணில் இடமில்லை’ என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். 
source: http://kaalaimalar.in/ashamed-of-being-born-in-india-says-mamata-banerjee-slams-hooliganism-in-the-name-of-religion/

Related Posts: