மேட்டுப்பாளையம் அருகே வனவிலங்குகளுக்கு மத்தியில் இரவில் பாதுகாப்போடு சுற்றுலா பயணிகள் தங்கிடும் வகையில் சிலிர்ப்பான சூழல் சுற்றுலாவிற்கு வனத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த மேட்டுப்பாளையத்தையொட்டி அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலையில் பரளிக்காடு பகுதி உள்ளது. இங்குள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியில் முன் பதிவு செய்து வருவோர்க்கு வாரத்தில் சனி மற்றும் ஞயிற்றுக்கிழமைகள் என இரு நாட்கள் மட்டும்,வனப்பகுதி வழியே பரிசல் பயணம், பழங்குடியின மக்களின் கைபக்குவத்தில் சத்தான இயற்கை உணவு, காட்டாற்றில் குளியல் என வனத்துறையினர் மற்றும் உள்ளூர் பழங்குடியின மக்கள் இணைந்து காலை முதல் மாலை வரை பகல் பொழுதிற்கான சூழல் சுற்றுலாவை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இரவில் அடர்ந்த காட்டின் நடுவே பூச்சமரத்தூர் என்னுமிடத்தில் வனவிலங்குகளுக்கு மத்தியில் பாதுகாப்பாய் தங்கி வனவிலங்குகள் நடமாட்டத்தை காணும் வகையில் இயற்கை சுற்றுலாவிற்கு வனத்துறையினர் முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ளனர். இங்குள்ள நீராதாரங்களில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குள் நீர்அருந்தி விளையாடி மகிழ்வதை பயணிகள் பாதுகாப்பாக கண்டு மகிழ்ந்திடவும், வனத்துறையினர் மற்றும் உள்ளூரை சேர்ந்த எட்டு பழங்குடியின இளைஞர்கள் பாதுகாப்போடு, மலையேற்ற பயிற்சி, மாலை மயங்கும் நேரத்தில் உள்ளூர் பழங்குடியின மக்களோடு இணைந்துஅவர்களின் பாரம்பரிய விளையாட்டு, இருள் சூழ்ந்ததும் பயர் கேம்ப் உள்ளிட்டவற்றை அனுபவிக்கும் வகையில் இங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இங்கு தங்கும் பயணிகளுக்கு மூன்று உயர அறைகள் உள்ளதாகவும் இதில் அறை ஒன்றுக்கு எட்டு பேர் வீதம் ஒரு இரவில் இருபத்திநான்கு பேர் தங்கலாம், எனவும், மூன்று வேளை உணவு, பரிசல் பயணம் உள்பட அனைத்து வசதிகளுக்கும் சேர்த்து நபர் ஒருவருக்கு ஆயிரத்து500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக விடுதி காப்பாளர் தெரிவித்தார்.