வியாழன், 18 மே, 2017

ஹேக் செய்யப்பட்ட சொமாட்டோ பயனாளர்களின் தகவல்கள் May 18, 2017

ஹேக் செய்யப்பட்ட சொமாட்டோ பயனாளர்களின் தகவல்கள்


தங்களிடம் உள்ள 12 கோடி பயனாளர்களில் 1.7 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்துள்ளது சொமாட்டோ நிறுவனம்.

இந்தியாவின் பிரபல உணவக வழிகாட்டியாக விளங்கும் சொமாட்டோவின் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தது. இதனையடுத்து சொமாட்டோ நிறுவனம், பயனாளர்களின் பெயர்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாகவும், கிரெடிட் கார்டு பாஸ்வார்டுகள், மற்றும் பணப்பரிவர்த்தனை விவரங்கள் முதலிய தகவல்கள் வெளியே போகவில்லை என தெரிவித்துள்ளது. 

இணையத்தில் “nclay" எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு நபர் இந்த ஊடுருவலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். சொமாட்டோ, இந்த பாதுகாப்பு மீறலுக்கு நிறுவனத்தைச் சார்ந்த யாரோக் காரணமாக இருப்பதாகக் கருதும் நிலையில், சில அறிக்கைகள் திருடப்பட்ட பயனாளர்களின் தகவல்களின் மொத்தக் கூட்டமைப்பும் இணையத்தில் $1,001.43க்கு விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.

இது குறித்து சொமாட்டா, இன்னும் சில நாட்களில், நிறுவனத்தின் பாதுகாப்பு அமைப்பை முழுமையாக மாற்றி அமைக்கப்போவதாகவும், இது போன்ற ஊடுருவல்களைத் தடுக்கத் தனிக்கவனம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தங்களின் கடவுச்சொல்லை (Password) மாற்றிக் கொள்ளுமாறு பயனாளர்களுக்கு குறுந் தகவல் அனுப்பியுள்ளது. சொமாட்டோ நிறுவனத்தின் தகவல் ஹேக் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts: