வியாழன், 25 மே, 2017

அதிமுக அணிகளை வைத்து மோடி கட்டப்பஞ்சாயத்து செய்வதாக ஸ்டாலின் விமர்சனம்! May 25, 2017




டெல்லியில் பிரதமர் மோடியை அரசியல் ரீதியாகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்ததாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னையில், பள்ளிக்கரணை அருகே ஜல்லடையன்பேட்டையில் உள்ள கோயில் குளம், துரைப்பாக்கம் பகுதியில் உள்ள கோயில் குளம், சோழிங்கநல்லூர் நேரு நகரில் உள்ள செல்வ விநாயகர் கோயில் குளம் ஆகியவற்றை தூர்வாரும் பணிகள் திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை இன்று காலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

துரைப்பாக்கம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் திமுகவுக்கு புகழ் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சிப்பதாக புகார் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், அதிமுகவின் இரு அணிகளையும் வைத்து பிரதமர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக விமர்சித்தார்.

Related Posts: