தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கதிராமங்கலம் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் கைதான 10 பேரை விடுதலை செய்யும் வரை , அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல மாட்டோம் என்றும் பொதுமக்கள் உறுதிப்பட தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓஎன்ஜிசி நிர்வாகம் சார்பில் கதிராமங்கலம் கிராமத்தினருடன், திருவிடைமருதூர் வருவாய் வட்டாசியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தை கதிராமங்கலம் பொதுமக்கள் முற்றிலும் புறக்கணித்தனர். இருப்பினும் கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்த 6 பேர் மட்டும் பங்கேற்றனர்.
அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் ஆலோசனை கூட்டத்திற்கும், தங்களுக்கும் தொடர்பும் இல்லை என்றும், போராட்டத்தில் கைதான 10 பேரை விடுதலை செய்யும் வரை , அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல மாட்டோம் என்றும் பொதுமக்கள் உறுதிபட தெரிவித்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை மாவட்ட அண்ணாதுரை, கதிராமங்கலம் போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் 10 பேரை விடுதலை செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.
மேலும் ONGC க்கு எதிர்ப்பு தெரிவித்துதொடர்ந்து 5 வதுநாளாக இன்று கடையடைப்பு நடைபெறுகிறது. ஒரு சில கடைகளே தறக்கப்பட்டுள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெறுகிறது என கூறப்படுகிறது.
வணிகர்களோடு 2வது நாளாக ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.