புதன், 5 ஜூலை, 2017

கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி! July 04, 2017




தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் போராட்டக் களத்தில் கைது செய்யப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்களை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி சார்பில் பெட்ரோலியப் பொருட்கள் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் மீது பல்வேறு  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு பொய் வழக்கு போட்டு உள்ளதாகவும், இந்த வழக்கை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், கைதான அனைவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய கோரியும், தஞ்சை மாவட்ட  நீதிமன்றத்தில் போராட்டக்குழு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

2 தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி நக்கீரன், கதிராமங்கலத்தில்பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் சம்மந்தப்பட்டவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இதனிடையே, திருவிடைமருதூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள கதிராமங்கலம் கிராம மக்கள் , 10 பேர் மீதான வழக்கை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

Related Posts: