திங்கள், 24 ஜூலை, 2017

ரூ.70,000 கோடிக்கு வெளிநாடுகளில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் இந்தியா! July 24, 2017

ரூ.70,000 கோடிக்கு வெளிநாடுகளில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் இந்தியா!


இந்திய ராணுவத்திற்கு 70 ஆயிரம் கோடி ரூபாயில் 6 நீர் மூழ்கிக் கப்பல் கட்டும் ஒப்பந்தத்திற்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

“நீருக்கு அடியிலான பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் தாய் போன்றது” என்று வர்ணிக்கப்படும் இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த 2007-ம் ஆண்டு இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் ‘PROJECT-75’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொள்முதல் தடைப்பட்டு வந்தது. 

இந்நிலையில் அண்மையில் எல்லைப் பகுதிகளில் எழுந்துள்ள அச்சுறுத்தல் காரணமாக கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் பொருட்டு பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Related Posts: