ஞாயிறு, 2 ஜூலை, 2017

அண்டை நாடுகளின் நடவடிக்கைகளால் கத்தாரின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும்?

சிறிய நாடான கத்தார் பெரும்பாலும் தனது தேவைக்கு இறக்குமதியாகும் உணவுப்பொருட்களையே சார்ந்துள்ளது.
இறக்குமதியாகும் உணவுப்பொருட்களையே சார்ந்துள்ள கத்தார்படத்தின் காப்புரிமைAFP
Image captionஇறக்குமதியாகும் உணவுப்பொருட்களையே சார்ந்துள்ள கத்தார்
இதில் கணிசமான அளவு உணவுப் பொருட்கள் சௌதி அரேபியா எல்லைக்கு அப்பால் இருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த எல்லை தற்போது மூடப்பட்டுள்ளது.
கத்தாரில் 2022-ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பாதிப்பா?படத்தின் காப்புரிமைREUTERS
Image captionகத்தாரில் 2022-ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பாதிப்பா?
எரிசக்தித் துறைக்கு தேவைப்படும் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லவும், 2022-ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தயார் செய்யவும் இதுவே முக்கியமான பாதையாக இருந்துவந்தது.

கத்தார் - முக்கிய தகவல்கள்

2.7மி
மக்கள் தொகை
  • 2மி ஆண்கள்
  • 11,437 சதுர கிமீ அளவு (4,416 சதுர மைல்கள்)
  • 77 ஆண்டுகள்ஆயுட்காலம் (ஆண்கள்)
  • 80 ஆண்டுகள்பெண்களின் ஆயுட்காலம்
Reuters
எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகளே கத்தாரின் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றன. பெரும்பாலும் இந்த ஏற்றுமதிகள் கடல்வழியாக நடப்பதால்,இவை உடனடியாக பாதிக்கப்படாது. ஆனால், இந்த பிரச்சனை தொடர்ந்தால் உண்டாகும் பொதுவான பொருளாதார இடையூறு கத்தாருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
அதே வேளையில், எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் குழுவான ஒபெக் அமைப்பில் கத்தாரும் உறுப்பினராக இருப்பதால், கத்தார் மற்றும் அண்டை நாடுளிடையே நிலவும் இந்த சர்ச்சை, உற்பத்தியை கட்டுப்படுத்தி எண்ணெய் விலையை ஏற்ற ஒபெக் அமைப்பு மேற்கொள்ளும் முயற்சிகளை வலுவிழக்கச் செய்யலாம்.
இது தொடர்பான பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்