மைசூர் புலி என்று போற்றப்படும் மாவீரர் திப்பு சுல்தான் இந்து மதத்திற்கு எதிராக ஒரு போதும் செயல்படவில்லை என்று Chief Minister of Karnataka Siddaramaiah தெரிவித்தார்!
இது குறித்து அவர் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மைசூரு புலி என்று போற்றப்படும் திப்புசுல்தான், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிரான கடைசிவரை போர்புரிந்தவர்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியது மட்டுமல்லாது, மதசார்பற்ற சமுதாயத்தை கட்டமைக்கவும் தீவிரமாக பாடுபட்டவர்.'திப்புசுல்தான் ஒரு மதவாதி.
ஹிந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்தார்' என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதரமற்ற பொய்யாகும்.
திப்புசுல்தான் மதவாதியாக இருந்திருந்தால், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ஸ்ரீரங்கநாதசுவாமி கோயிலின் வளர்ச்சிக்கு மானியம் வழங்கியிருக்கமாட்டார்.
மாநில அரசு மீது குறைகூறுவதற்கு எதுவும் இல்லாததால் திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு Bharatiya Janata Party (BJP) எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் சில்லரை விஷயங்களை முன்வைத்துக்கொண்டு அரசை விமர்சித்துவருகிறார்கள்.
திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. எதிர்ப்பதன் மூலம் மதவாதிகள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சமுதாயத்தை பிளவுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுவருகிறார்கள். சிற்சில விவகாரங்களை விமர்சித்து மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.
திப்புசுல்தான் பிறந்தநாளை மாநில அரசு சார்பில் இதற்கு முன்னரே கொண்டாடியிருக்க வேண்டும். தாமதமாக கொண்டாடுகிறோம் என்பது தான் உண்மை என்று கூறினார்.