2070 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மதமாக இஸ்லாம் இருக்கும் என்று பியூ ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வின் முடிவு கூறுகிறது.
2010ஆம் ஆண்டு உலகின் அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தோனேஷியா இருந்தது.
ஆனால் 2050இல் இந்தியா அந்த இடத்தை பிடிக்கும்.
அதேசமயம் இந்தியாவில் இந்துக்களே பெரும்பான்மையாக இருப்பார்கள்.
பிரிட்டனிலும் பிரான்ஸிலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50% விட குறைவாக சரியும்.
2050 ஆம் ஆண்டில் ஐரோப்பிய மக்கள்தொகையில் 10% முஸ்லிம்களாக இருப்பர் என கணிக்கப்படுகிறது.
உலக கிறிஸ்தவர்களில் 40% பேர் சஹாராபாலைவனத்துக்கு தெற்கில் உள்ள ஆப்ரிக்காவில் இருப்பார்கள்.
2050 ஆம் ஆண்டில் அமெரிக்க மக்கள் தொகையில் நூற்றுக்கு இருவர் முஸ்லிமாக இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.