சிக்கிம் எல்லையில் ராணுவத்தைக் குவித்ததன் மூலம் இந்தியா நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
சிக்கிமில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த 8 ஆம் தேதி சிக்கிமில் ஊடுருவிய சீன ராணுவம், டோக்லோம் பகுதியில் இந்தியா அமைத்திருந்த 2 பதுங்கு குழிகளை இடித்துத் தள்ளியது. இதனால் இந்தியா- சீனா எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாடுகளும் போட்டிப் போட்டு கொண்டு எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவித்து வருகின்றன. இந்நிலையில் சிக்கிம் எல்லைப் பகுதியில் ராணுவத்தை விலக்குமாறு சீனா விடுத்தக் கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்து விட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷாங், சிக்கிம் பகுதியில் இந்தியா - சீனா எல்லை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டள்ளதாகக் கூறினார். இந்த சூழலில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை, முந்தைய அரசுகள் பின்பற்றி வந்த செயலுக்கு மாறானது என்றும் நம்பிக்கைத் துரோகம் என்றும் அவர் வர்ணித்தார். இதையடுத்து இருநாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா மதிக்க வேண்டும் என்றும், உடனடியாக டோக்லாம் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் சீனா வலியுறத்தி உள்ளது