ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பஞ்சாயத்தில் பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிவதற்கும், செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தோல்பூர் நகரத்தில் பெண்கள் இறுக்கமான ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கக்கோரி 5 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, பெண்கள் இறுக்கமான ஆடைகள் அணிவது கண்ணியத்திற்கு எதிரானது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் பெண்கள் செல்போன்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் தடையை மீறி மதுவிற்பனை செய்தால் ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என பஞ்சாயத்து தீர்ப்புள்ள நிலையில், பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் லோக், செல்போன் மற்றும் மதுபான தடைகளுக்கு இடையே வேறுபாடு உள்ளதாகவும், நாம் கற்காலத்தில் வாழவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.