சரக்கு மற்றும் சேவை வரி அமலானதன் எதிரொலியாக அத்யாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்காணித்து விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழித்துந்துள்ள நிலையில் அதன் தாக்கும் குறித்து மத்திய அமைச்சகச் செயலாளர் பி.கே சின்கா நேற்று ஆய்வு நடத்தினார். புதிய வரிமுறை நடைமுறைக்கு வந்தப் பிறகு அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்தை கண்காணித்து விலை கட்டுப்பாட்டில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போது பி.கே.சின்கா உத்தரவிட்டார்.
மேலும் சில்லறை விற்பனையாளர்கள், மொத்த வியாபாரிகள், கடைக்காரர்கள் போன்றோர் தாங்கள் விற்கும் பொருட்களின் விலைப்பட்டியலை பார்வைக்கு வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தவும் பி.கே.சின்கா வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
விற்பனையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் கணினிகள், இயந்திரங்களை புதிய வரி விகிதங்களுக்கு ஏற்ப விரைவில் மாற்றியமைக்க அறிவுறுத்துமாறு அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சக செயலாளர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.