தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கண், காது, மூக்கு, வாய் ஆகியவற்றில் இருந்து ரத்தம் வெளியேறும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள 3 வயது சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முகம்மது அஃப்சல் என்பவரின் 3 வயது குழந்தையான ஆஹானாவுக்கு கடந்த 16 மாத காலமாக இப்பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹெமாடிட்ரோசிஸ் எனும் அரிய வகை நோயால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அளித்து வரும் சிகிச்சை காரணமாக ரத்தம் வெளியேறுவது குறைந்துள்ளதாகவும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் சிரிஷா தெரிவித்துள்ளார்.
எனினும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அளிக்க முடியுமா என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தனது மகளின் பிரச்னைக்குத் தீர்வு காண பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சென்றுவிட்டதாகவும், எனினும் எங்குமே தீர்வு கிடைக்கவில்லை என்றும் முகம்மது அஃப்சல் வேதனை தெரிவித்துள்ளார். தனது மகளுக்கு ஏற்பட்டுள்ள நோயைக் குணப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் சந்திர சேகர ராவும் உதவ வேண்டும் என்றும் முகம்மது அஃப்சல் கோரிக்கை விடுத்துள்ளார்.