சனி, 8 ஜூலை, 2017

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவு அடிப்படையில் தமிழகம் முதலிடம்! July 08, 2017




தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவு அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக காவல்துறை களவுபோன சொத்துக்களை மீட்டதில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தமிழக காவல்துறை விவாதத்தின் மீதான பதிலுரையில் பேசிய அவர், திமுக ஆட்சி காலத்தைவிட, அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக கூறினார். கடந்த 6 ஆண்டுகளில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட 680 அறிவிப்புகளில் 419 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர்,  காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப தேர்வாணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக பேரவையில் பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, புதிய காவல் நிலையங்கள் கட்டுவது உள்ளிட்ட 54 புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

Related Posts: