தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான கிணற்றை தடையை மீறி முற்றுகையிட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் அருகேயுள்ள லெட்சுமிபுரம் கிராமத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமாக 100 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 200 அடி ஆழத்தில் கிணறு வெட்டப்பட்டதால் அருகில் உள்ள மற்ற கிணறுகளில் தண்ணீர் வற்றி குடிநீர் பஞ்சம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் தடையை மீறி அந்த கிணற்றை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதனால், போலீசார் வாகனத்தை அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.