திங்கள், 10 ஜூலை, 2017

இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்! July 10, 2017

இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்!


மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மருத்துவ படிப்பில் 85 சதவீத இடங்கள் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றாமல் புதிய இட ஒதுக்கீடு முறையை நடைமுறைபடுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என அவர்கள் மனுவில் தெரிவித்திருந்தனர். 

இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளதால் மாநில அரசுக்கு அந்த அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

Related Posts: