சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘சிங்குவாங் செய்தி நிறுவனம்’ பூடான் எல்லையில் நிலவிவரும் படைநிறுத்தம் மற்றும் போர் பதற்றச்சூழல் குறித்து இந்தியாவை எச்சரிக்கும் தொனியில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய - சீன போர் பதற்றச்சூழல் ஒரு மாதத்திற்கு மேலாக நிலவி வருகிறது. பூடானில் உள்ள டோக்லாம் பகுதியில் அமைந்துள்ள சும்பி பள்ளத்தாக்கு அருகே சீனா தன் படைகளை குவித்துள்ளது. அந்த பகுதியில் சுமார் 5கி.மீ வரை உள்ளே வந்திருக்கும் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில், பூடானின் உதவி அழைப்பை ஏற்று டோக்லாம் பகுதியில் படைகளை குவித்தது.
இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவலின் படி இருபடைகளுக்கும் இடையேயான இந்த ‘முறைப்பு’ ஜூன் 16 முதல் தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்தும் தற்போது வரை இருநாட்டு படைகளும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கிறது. சீனா சும்பி பள்ளத்தாக்கு பகுதியை புவியியல் ரீதியாக இந்தியாவையும், பூடானையும் கண்காணிக்க உதவும் என கணக்குப்போடுகிறது. சீனா தற்போது ஆக்கிரமித்திருக்கும் இடத்திலிருந்து இந்திய - பூடான் எல்லை பகுதிகள் தெளிவாக தெரியும். இதன்மூலம், இந்தியாவின் சிலிங்குரி பாதையையும், பூடான் உடனான பரஸ்பர பரிமாற்றங்களையும் கண்காணிக்க சீனா விரும்புகிறது.
இந்நிலையில், சீனாவின் சாலை அமைக்கும் பணிகளை இந்திய ராணுவம் தடுத்திருக்கிறது. பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வுகாண விரும்புவதாக சீனா தெரிவிக்கிறது. ஆனால், பேச்சுவார்த்தைக்கான இந்தியாவின் அழைப்பை முதல் இரண்டு முறையும் சீனா நிராகரித்தது. மூன்றாவது முறை அழைத்த போது ஒத்துக்கொண்டாலும் எந்த வித பயனும் இல்லை. பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே இந்தியா தன்னுடைய படைகளை நிபந்தனையற்று விலக்கிக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கிறது.
இந்நிலையில், சீனாவின் அதிகாரப்பூர்வ இதழான ’சிங்குவாங் செய்தி நிறுவனம்’ நேற்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வார்த்தைகளும், விநோதமான எச்சரிக்கைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்த பதிவில், ‘பேச்சுவார்த்தைக்கான சீனாவின் அழைப்புகளுக்கு இந்தியாவின் காதுகள் செவிடாக உள்ளன. இதே நிலை நீடித்தால் இந்தியா அவமானத்தை சந்திக்க நேரிடும். இதற்கு முன்பாக நடந்த 2014,2013ல் நடந்த படைநிறுத்தங்களைப் போல இந்தியா இதைக் கருதக்கூடாது. காஷ்மீரின் லடாக் பகுதியில் நடந்த அந்த படை நிறுத்தங்கள் இந்தியா, சீனா, பாகிஸ்தான் சம்பந்தப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை வேறு. பூடான் உதவிக்கு அழைத்ததாக இந்தியா சொல்லி வருகிறது. ஆனால், பூடான் அப்படி அழைப்பு ஏதும் விடுக்க வில்லை. நிலைமை மோசமாவதற்கு முன்பு இந்தியா தன் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தியா படைகளை திரும்பப்பெறும் வரை பேச்சுவார்த்தைக்கு எந்த இடமும் இல்லை என சீனா தெளிவுபடுத்தியுள்ளது. சீனாவைப் பொறுத்தவரை எல்லை என்பது அடிமடியைப் போன்றது’ என்று கடுமையான வார்த்தைகளால் பதிவிட்டுள்ளது.
‘சிங்குவாங்’ செய்தி நிறுவனம் மற்ற செய்தி நிறுவனங்களை போல அல்ல. சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் அது. சீனாவின் ‘கண்ணும் நாவும்’ போன்ற செய்தி நிறுவனம் என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு செல்வாக்கு மிக்கது. அப்படிப்பட்ட ஒரு செய்தி நிறுவனம் லடாக் பகுதியை பாகிஸ்தானுடன் இணைத்து பேசுவது விநோதமானது. மிக அரிதான நேரங்களில் மட்டுமே சீனா எல்லை விவாகாரத்தை பாகிஸ்தானுடன் தொடர்புப்படுத்தி பேசும். 1962 போருக்கு பிறகு மிக நீண்ட படை நிறுத்தம் தற்போது டோக்லாவில் நடந்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் மிரட்டும் தொனியில் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.