திங்கள், 17 ஜூலை, 2017

கோவையிலிருந்து இலங்கைக்கு சேவையை தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்! July 17, 2017




ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கோவையிலிருந்து கொழும்புக்கு வாரத்தில் நான்கு நாட்கள் விமானப் போக்குவரத்தைத் தொடங்குகிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்தியாவின் 14 நகரங்களுக்கு 126 விமானங்களை இயக்குகிறது. ஏற்கெனவே சென்னை, திருச்சி, திருவனந்தபுரம், மும்பை, கயா,புதுடெல்லி, மதுரை, வாரணாசி, கொச்சி, பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. கொழும்பு - கோவை இடையே புதிதாக வாரத்தில் 4 நாட்கள் விமானப் போக்குவரத்தைத் தொடங்க உள்ளது. 

இதன்மூலம் கோவையில் இருந்து உலகின் பல்வேறு நகரங்களுக்குப் பயணிகளையும், சரக்குகளையும் கொண்டுசெல்வதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு பாலமாக அமையும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி தெரிவித்தார்.

Related Posts: