புதன், 19 ஜூலை, 2017

ஜி.எஸ்.டி வரியில்லாமல் பொருட்களை விற்றால் என்ன தண்டனை என்று தெரியுமா? July 19, 2017

ஜி.எஸ்.டி வரியில்லாமல் பொருட்களை விற்றால் என்ன தண்டனை என்று தெரியுமா?


ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் அல்லது வரி ஏய்ப்பு செய்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து, இந்திய கம்பெனி செயலர் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்துடன், உரிய பில் இல்லாமல் பொருட்களை அனுப்பினாலோ அல்லது சேவை செய்தாலோ, அது குற்றமாக கருதப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், உள்ளீட்டு வரிப் பயனை பெறும் நோக்கத்துடன், எந்தப் பொருளையும் விற்காமல், போலியான பெயரில் பில் தயாரித்தலும் குற்றமாகும்.  

இந்நிலையில் ஜிஎஸ்டியை வசூலித்துவிட்டு, மூன்று மாதங்கள் வரை அதை அரசுக்கு செலுத்தாமல் இருப்பதும் குற்றமாகும். எனவே 5 கோடி ரூபாய் வரையிலான குற்றங்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தொடர்பான குற்றங்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts: