புதன், 19 ஜூலை, 2017

ரஜினிகாந்த், கமல்ஹாசன் குறித்து கி.வீரமணி காட்டமான விமர்சனம் July 19, 2017




அத்தைக்கு மீசை முளைக்கட்டும்; பிறகு சித்தப்பா என்று அழைக்கலாம் என நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அரசியல் பிரவேசம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கு எதிராக திமுகவும் ஒரு முடிவெடுக்க சூழல் வந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மெளனம் சாதிக்காமல் மாநில உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதற்காக குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என்றும் கி.வீரமணி கேட்டுகொண்டார். மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவது குறித்து முழுமையான தகவல் வந்த பிறகு பதிலளிப்பதாகவும் கூறினார். 

Related Posts: