வியாழன், 20 ஜூலை, 2017

கோவிந்துக்கு வாழ்த்துக்கள்; ஆனால், போர் இன்னும் முடியவில்லை - மீராகுமார் July 20, 2017


கோவிந்துக்கு வாழ்த்துக்கள்; ஆனால், போர் இன்னும் முடியவில்லை - மீராகுமார்



குடியரசுத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராம் நாத்திற்கு 2930 எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மீராகுமாருக்கு 1844 எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் வாக்குகள் கிடைத்துள்ளன. ராம்நாத்திற்கு கிடைத்த வாக்குகளின் மதிப்பு சுமார் 7 லட்சத்து 2 ஆயிரத்து 44 ஆகும். மீராகுமருக்கு கிடைத்த வாக்குகளின் மதிப்பு 3 லட்சத்து 67 ஆயிரத்து 314 ஆகும்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மீராகுமார், “ வெற்றிபெற்றுள்ள ராம் நாத் கோவிந்திற்கு வாழ்த்துக்கள். ஆனால், இது சித்தாந்த போர். இந்த சித்தாந்த போர் இன்னும் முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts: