
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு பதிலாக புதிய 2000, 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக அடுத்த மூன்று மாதங்களில் இந்தியாவில் சுமார் 15 லட்சம் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய நிதி பொருளாதார மையம் என்கிற ஆய்வின் படி 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்தியாவில் வேலையில் இருந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 40.65 கோடி ஆகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்து அடுத்த 4 மாதங்களுக்கு பிறகு 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 40.5 கோடி ஆகக் குறைந்துள்ளது.
இதேபோல், ஃபிக்கி எனப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக மையம் நடத்திய ஆய்வில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 73% நிறுவனங்கள் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்தவில்லை என்று தெரிவித்துள்ளது.