கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கார்வார் மாவட்டதில் உள்ள ஆறுகளிலும், பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், மழையால், சாலஹல்லி என்ற கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி மல்லிகார்ச்சுனா என்பவர் உயிரிழந்தார்.
இதேபோல், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள பத்ரா ஆற்றில், தரைப் பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஓடுகிறது. இதனால், அந்தப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.