வெள்ளி, 21 ஜூலை, 2017

காவிரி நதிநீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்! July 21, 2017

காவிரி நதிநீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!


காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் சட்டத்தின் மூலம் தீர்வு காண முயற்சிப்போம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நேற்று 6-வது நாளாக நடைபெற்றது. அப்போது கர்நாடக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் இருக்கும் நிலத்தடி நீரை, காவிரி நடுவர் மன்றம் கணக்கில் கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார். 

இதனையடுத்து தமிழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கர்நாடகம் இதுவரை உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை என்றும், நதிநீர் பங்கீடு விவகாரத்தில், அனைத்து மாநிலங்களுடன், கர்நாடகம் மோதல் போக்கை கடைபிடிப்பதாகவும் வாதிட்டார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை கணக்கில் கொண்டால், கர்நாடகத்தின் நிலத்தடி நீரையும் கணக்கில் எடுத்துகொள்ள நேரும் என அறிவுறுத்தினர். மேலும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், சட்டத்தின் மூலம் தீர்வு காண முயற்சிப்போம் என தெரிவித்து, அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை 25ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Posts: