ஞாயிறு, 23 ஜூலை, 2017

"கமல்ஹாசனை திமுக இயக்கவில்லை" : கனிமொழி July 21, 2017



நடிகர் கமல்ஹாசனை திமுக இயக்குவதாக கூறுவதில் உண்மை இல்லை என அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“திமுக என்பது மாபெரும் இயக்கம். அதில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு வேறு யாருடைய உதவியும் தேவையில்லை. கமலை இயக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. கமல் போன்ற பிறரின் உதவி திமுகவிற்கு தேவையில்லை.” 

“கமல்ஹாசன் அவருடைய கருத்துக்களை சொல்லி வருகிறார். அது பற்றி நான் ஒன்றும் சொல்வதிற்கில்லை. திமுக தொடர்ந்து நீட் தேர்வு விலக்குக்காக அழுத்தம் கொடுத்தது. ஆனால் இப்போது தான் அதிமுக அமைச்சர்கள் நீட் தேர்வு விலக்குக்காக பிரதமரை சந்தித்துள்ளனர். இது காலம் தாழ்ந்த நிகழ்வு. பிரதமர் சந்திப்பின் போது நீட் தேர்வுக்கு முழு விலக்கு கேட்டார்களா அல்லது என்ன கோரிக்கையை வைத்தார்கள் என்பதில் தெளிவு இல்லை” என்று தெரிவித்தார்.

Related Posts: