பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 30 மாத கருவை சுமந்துவரும் 10 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
சண்டிகரில் வீட்டு வேலை செய்து வாழ்க்கையை நடத்திவரும் நேபாளத்தை சேர்ந்த தம்பதிகளில் 10 வயது மகள், அவர்களது உறவினர் ஒருவரால் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதில் கருவுற்றுள்ளார்.
சிறுமியின் வயிறு திடீரென எதிர்பாராத விதமாக பெரிதாகி வந்ததுடன், தொடர்ந்து வயிறு வலிப்பதாக சிறுமி கூறியதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், சிறுமி கருவுற்றிருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியின் உறவினர் ஒருவர் அவரை தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், 30 மாத கருவை சுமந்து, உடல் ரீதியிலும், உளவியல் ரீதியிலும் அவதிப்பட்டு வரும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கோரி சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், 10 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வது தொடர்பாக மருத்துவர்கள் அடங்கிய அறிஞர்கள் குழுவை அமைத்து சிகிச்சை விவரங்களை ஆலோசித்து அறிக்கை அளிக்க மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.
இதனை அடுத்து, பாலியல் பலாத்காரத்தால் கருவுற்ற சிறுமியை ஆராய்ந்த மருத்துவர் குழு, ஏற்கனவே அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களையும் சேர்த்து கலந்தாலோசித்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. இந்த நிலையில், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வது அவரது உயிருக்கு ஆபத்தாகலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
10 வயது சிறுமி கருவுறுவதென்பது அரிதிலும் அரிதான நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள், 15 வயது நிறைவடையாத நிலையில், குழந்தையை வெளியேற்றும் சக்திவாய்ந்ததாக கருப்பை குழாய் இருக்காது என்பதால், 15 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் குழந்தை பெற்றுக் கொள்வது ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன் உயிருக்கே ஆபத்தாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
1970ம் ஆண்டு கருக்கலைப்பு தொடர்பாக உருவாக்கப்பட்ட இந்திய அரசின் சட்டமானது, 20 வாரங்களுக்கும் மேற்பட்ட கருவினை கலைப்பதை தடை செய்துள்ளது. உடல் நிலை, கருவின் தன்மை உள்ளிட்ட சில காரணங்களால் ஒரு சில வழக்குகளில் இந்த விதியை மீறி கருக்கலைப்புக்கு நீதிமன்றங்கள் அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் சிறுமியை பொறுத்தவரை 30 வாரம் நிறைவடைந்த கருவை கொண்டிருப்பதாலும், கருவை கலைக்க மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாலும், சிறுமியின் பெற்றோரின் கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மாவட்ட நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை அணுக பெற்றோர் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சிறுவர்-சிறுமியர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு 13 மணி நேரத்திற்கும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2015ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, நாட்டில் 10,000-க்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.