சனி, 22 ஜூலை, 2017

முட்புதரில் வீசப்பட்ட பிறந்து ஒரு நாள் கூட ஆகாத பச்சிளம் குழந்தை! July 22, 2017

முட்புதரில் வீசப்பட்ட பிறந்து ஒரு நாள் கூட ஆகாத பச்சிளம் குழந்தை!


விழுப்புரம் அருகே பையில் வைத்து முட்புதரில் வீசப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரம் ஈ.பி.காலனிக்கு பின்புறம், இரத்தக் கரையோடு இருந்த பை ஒன்றில், பிறந்து ஒரு நாள்கூட ஆகாத பச்சிளம் குழந்தை இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

தகவல் அறிந்து வந்த போலீசார் பச்சிளம் குழந்தையை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு குழந்தைக்கு தற்போது சிகிச்சை அளிப்பட்டு வருகிறது. குழந்தையை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் நேரில் பார்வையிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts: