எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.
நாகையைச் சேர்ந்த இந்த மீனவர்கள், இலங்கை கடற்கரை அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக் கூறி மீனவர்கள் 8 பேரையும், கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நாகை மாவட்ட மீன் துறை இணை இயக்குநர் அமலா சேவியர் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தில் நடைபெற்ற 5வது கைது நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.