உலகளவில் நடக்கும் பெண் குழந்தை திருமணங்களில் 33 சதவீதம் இந்தியாவில் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் நடக்கும் பெண் குழந்தை திருமணங்கள் குறித்து Action Aid India அமைப்பு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் குழந்தை திருமணங்களை ஒழிப்பது என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையை நடிகையும், சமூக ஆர்வலருமான ஷபானா ஆஸ்மி டெல்லியில் வெளியிட்டார்.
உலகில் ஒரு நிமிடத்துக்கு 28 பெண் குழந்தைகள் திருமணம் நடைபெறுவதாகவும், இதில் 2க்கும் மேற்பட்ட திருமணம் இந்தியாவில் நடப்பதும் தெரியவந்துள்ளது. ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை விட அதிகளவில் 18 வயதுக்குட்பட்டோருக்கான திருமணம் இந்தியாவில் நடைபெறுவதாக தெரிவித்துள்ள Action Aid India அமைப்பு, குழந்தை திருமணங்களை தடுப்பதன் மூலம் குழந்தை பிறப்பின் போது உயிரிழக்கும் 27 ஆயிரம் பேரையும், 55 ஆயிரம் சிசு மரணத்தையும், 1 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள் மரணத்தையும் தடுக்க முடியும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.