கச்சத்தீவை மீட்பது ஒன்றே, தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வை தரும் என்று, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில தினங்களில், மீனவர்கள் 12 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை, தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். பாக் நீரிணைக்கு அருகே, பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வது, இலங்கை அரசின் உச்சபட்ச அத்துமீறலையே காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளால், மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கச்சத்தீவை மீட்பதே இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு என்றும் கூறியுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள 72 மீனவர்களையும், அவர்களது 148 படகுகளையும் விடுவிக்க, நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சர்வதேச கடல் எல்லை மறு வரையறை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.