இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை நிலவுவதாகவும், போர் வந்தால் 10 நாட்களுக்குதான் ஆயுதங்கள் போதுமானதாக இருக்கும் என மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தலைமை கணக்கு தணிக்கையாளர் குழு, நேற்று தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஆயுதப் பற்றாக்குறை பிரச்சினை முன்பிருந்தே நீடித்து வருவதாகவும், அது படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தாலும் இன்னும் பற்றாக்குறை நீடித்து வருவதாக சி.ஏ.ஜி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.
2016 செப்டம்பர் நிலவரப்படி ராணுவத்தில் 40 சதவீத ஆயுதப் பற்றாக்குறை உள்ளதாகவும், மொத்தமுள்ள 152 வகை ஆயுதங்களில் 61 வகை ஆயுதங்கள், போர் ஏற்பட்டால் 10 நாட்களுக்குக்கூட தாங்காது எனவும், இது கவலைக்குரிய விஷயம் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.