திங்கள், 24 ஜூலை, 2017

உங்கள் நாய் என்ன பேசுகிறது என நீங்கள் புரிந்துக் கொள்ளலாம்! July 23, 2017


இனி உங்கள் நாய் என்ன பேசுகிறது என நீங்கள் புரிந்துக் கொள்ளலாம்!


உங்கள் வீட்டிலுள்ள நாய் என்ன பேசுகிறது என்பதை மனிதர்களின் மொழிக்கு மாற்றக்கூடிய கருவியை தயாரிப்பதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சிக்கு பக்க பலமாக திகழும் வகையில் அமேசான் நிறுவனம் நிதி அளித்து வருகிறது.

அமெரிக்காவின் வடக்கு அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்லோபோட்சிக்காப் தலைமையிலான குழு இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நாய், பூனை உள்ளிட்ட வீட்டு விலங்குகளின் மொழிகளை புரிந்துக் கொண்டு அதனை மனிதமொழியில் மாற்றி வழங்குவதற்கான செயற்கை அறிவு கொண்ட கருவியை உருவாக்கி வருகின்றனர்.

வட அமெரிக்காவில் காணப்படும் நிலத்தில் குழி பறித்து வாழும் அணில் வகையை சேர்ந்ததான “priarie dogs”-களை கொண்டு செய்யப்பட்ட ஆராய்ச்சி முக்கிய முடிவுகளை தந்துள்ளதுடன், ஆராய்ச்சிக்கு புதிய பரிணாமத்தை அளித்துள்ளது. priarie dogs வண்ணங்களையும், தனித்தனி விலங்கினங்களை குறிக்கவும் பிரத்தியேகமான சொற்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

priarie dogs-களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் வீட்டு செல்லப்பிராணிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள ஸ்லோபோட்சிக்காப், பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகளின் பிரத்யேக மொழியையும் அதன் சொற்களையும் இனம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

செல்லப் பிராணிகளுக்கான மார்க்கெட் உலக அளவில் மிகப்பெரியது என்பதால், இத்தகையதொரு கருவியை உருவாக்குவது உலகம் முழுவதும் பெரிய வரவேற்பை பெறும் என்பதை கருத்தில் கொண்டு இந்த ஆய்வை அமேசான் நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. இத்தகையதொரு கருவி அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்தைக்கு வரும் என அமேசான் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Posts: