நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கிறார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராகக் களம் இறங்கிய ராம்நாத் கோவிந்த் 7 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை விட 3 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்கிறார்.
இன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நடைமுறைகளில் ராம்நாத் பங்கேற்கிறார். இன்று நண்பகல் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் விழாவில் ராம்நாத் கோவிந்திற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் ஹேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
பதவியேற்பு விழாவிற்காக டெல்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உச்சக்கட்ட பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பல்வேறு மாநில முதல்வர்களும் பங்கேற்கின்றனர்.