செவ்வாய், 25 ஜூலை, 2017

போர்ப்பதற்றச் சூழலில் இந்திய - சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு! July 24, 2017

​போர்ப்பதற்றச் சூழலில் இந்திய - சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு!



இந்தியாவும் சீனாவும் பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் படைகளை நிறுத்தியுள்ளன. ஒருமாதத்திற்கு மேலாக இந்த படைநிறுத்தம் தொடர்கிறது. 1962 போருக்குப் பிறகு மிகப்பதற்றமான சூழல் நிலவுகிறது. தொடர்ந்து சீனா இந்தியாவுக்கு எச்சரிக்கைகளை விடுத்துவருகிறது.

இந்நிலையில், சீனாவின் பெய்ஜிங்கில் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்திய அரசின் சார்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்கிறார். 

இந்த சந்திப்பின் போது, இந்திய - சீன அதிகாரிகள் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். சீன வெளியுறவு அமைச்சகம் இதை உறுதிசெய்துள்ளது. இந்த சந்திப்பின் போது சிக்கிம் எல்லையில் நிலவிவரும் படைநிறுத்த பதற்றம் குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Related Posts: