செவ்வாய், 25 ஜூலை, 2017

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க ‘SHe-Box' July 24, 2017

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க ‘SHe-Box'


மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், தாங்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க ‘SHe-box' எனப்படும் ஆன்லைன் புகார் பெட்டியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பேசிய மத்திய அமைச்சர் மேனகா காந்தி, “ பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து, தேசிய அளவிலான ஒரு ஆய்வுகளை விரைவில் மேற்கொள்ள உள்ளோம். அனைத்து மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களும் சுலபமாக இந்த புகார் வசதியை பயன்படுத்தும் வகையில் நடைமுறைபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். தற்போது மத்திய அரசு அலுவலகங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த முறை விரைவில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் பயன்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும்.”

“இணையதளம் மூலம் இந்த புகார்கள் பெறப்படும் வகையில் 'SHe-box' ஆன்லைன் புகார் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் எளிமையான முறையில் பெண்கள் அதை பயன்படுத்தும் வகையில் இந்த இணையதளம் அப்டேட் செய்யப்படும்” என தெரிவித்தார். இந்த திட்டத்திற்கான முன்னெடுப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts: