“கக்கூஸ்” ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதியை போலீசார் திடீரென கைது செய்துள்ளனர்.
இடதுசாரி இயக்க செயல்பாட்டாளரான திவ்யபாரதி கடந்த சில வாரங்கள் முன்பாக “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தை இயக்கியதன் மூலம் பரவலான கவனத்தை பெற்றார். மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அவலங்களையும், மலம் அள்ளுவதற்கென்றே பிரத்யேக சாதியை கொண்டுள்ள சமூகத்தின் இழிவையும் வெளிச்சம் போட்டுக் காட்டியதால் ‘கக்கூஸ்’ ஆவணப்படம் தமிழின் மிக முக்கிய ஆவணப்படம் வரிசையில் முக்கிய இடத்தை பிடித்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆவணப்படத்தை திரையிட போலீசார் தடை விதித்த நிலையில், YouTube-இல் இப்படம் பதிவேற்றப்பட்டு பரவலாக வெகுமக்களை சென்றுச் சேர்ந்தது. இந்தியா மட்டுமல்லாமல் வேறு சில நாடுகளிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு இந்த சமூக இழிவுத் தொடர்பாக பரவலாக கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் பங்கேற்றதாக தொடரப்பட்ட வழக்கில், இன்று காவல்துறை திவ்ய பாரதியை கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். ஏற்கனவே, அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகித்த மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.