புதன், 19 ஜனவரி, 2022

12 – 14 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது? மத்திய அரசு அறிவிப்பு

 18 1 2022 மார்ச் மாதத்திற்குள் 15 முதல் 18 வயதினருக்கான தடுப்பூசிகள் செலுத்தும் பணி முடிந்துவிடும் என்பதால் கையோடு 12 முதல் 14 வயதினருக்கு மார்ச் மாதம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்படும் என்று நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்டிஜிஐ) கோவிட்-19 பணிக்குழு தலைவர் என்.கே அரோரா திங்களன்று கூறினார்.

இந்தியாவில் மொத்தம் 7 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் பேர் 15 முதல் 18 வயதினர் வரம்பில் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது வரை 3.45 கோடி குழந்தைகளுக்கு முதல் தவணை கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை அடுத்த 28 நாட்களில் செலுத்தப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் வயதினர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதே வேகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம் அடைந்தால் இந்த மாத இறுதிக்குள் அனைத்து குழந்தைகளுக்கும் (15 முதல் 18 வயதினர்) தடுப்பூசி செலுத்திவிடலாம். இரண்டாம் டோஸ் தடுப்பூசி பிப்ரவரி மாத இறுதிக்குள் செலுத்திவிட இயலும் என்று அவர் டாக்டர் அரோரா கூறியுள்ளார்.

இந்த வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவுற்றால் உடனே அடுத்த கட்டமாக 12 – 14 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளை மார்ச் மாதத்தில் துவங்கிவிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

12 முதல் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 7.5 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை 7 மணி வரையிலான தற்காலிக தடுப்பூசி அறிக்கைகள், 24 மணி நேரத்தில் 39 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டதன் மூலம், ஒட்டுமொத்த எண்ணிக்கை 157.20 கோடி அளவைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தரவுகளின் படி இதுவாஇ 15-18 வயதினருக்கு 3.45 கோடி முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ம் தேதி அன்று தடுப்பூசி போடும் பணிகள் சுகாதாரத்துறை ஊழியர்களிடம் இருந்து துவங்கப்பட்டது முன்கள பணியாளர்களுக்கு பிப்ரவரி 2ம் தேதி முதல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

அடுத்தக்கட்ட தடுப்பூசிகள் மார்ச் 1ம் தேதி துவங்கப்பட்டது . முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்களுடம் இருக்கும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமானது. நாடு முழுவதும் ஏப்ரல் 1, 2021 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதித்து அதன் தடுப்பூசி இயக்கத்தை விரிவு செய்தது அரசு.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் 15 முதல் 18 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் பைகள் ஆரம்பமானது. ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ்கள் வழங்க ஆரம்பித்தது இந்திய அரசு.

source https://tamil.indianexpress.com/india/vaccination-for-12-14-age-group-likely-from-march-says-top-govt-expert-398689/