Hathras rape cases lawyer Seema Kushwaha : உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 2020ம் ஆண்டு நடைபெற்ற ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு தலித்கள் எப்படி ஒடுக்கப்படுகின்றனர் என்பதற்கு ஒரு உதாரணம் என்று கூறுகிறார் சீமா.
2012ம் ஆண்டு டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் 2020 ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு நீதிபெற்று தர வாதாடினார் சீமா.
39 வயதான இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ள நிலையில், வருகின்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ”நாங்கள் சீமாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். லாபம், நஷ்டத்தை பார்க்காமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்கும் அவரை போன்ற நபர்களைத் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபைஸன் கான் தெரிவித்தார்.
2014ம் ஆண்டு டெல்லி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக ஆஜரான அவர் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தருவதை உறுதி செய்தார்.
பிறகு மாவட்ட நிர்வாகத்தால் அவசர அவசரமாக எரிக்கப்பட்ட பெண் குறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது அலகாபாத் நீதிமன்றம். அதனை தொடர்ந்து அந்த வழக்கில் ஆஜராக முடிவு செய்தார் சீமா. இதுவரை, உ.பி. அரசாங்கம் அவர் தகனம் செய்யப்பட்ட விதத்திற்காக குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க விரும்பவில்லை. அந்தச் சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் மூலம், தலித் சமூகம் எப்படி ஒடுக்கப்படுகிறது என்பதை நம்மால் காண இயலும் என்று சீமா கூறினார்.
உகராப்பூர் கிராமத்தில் உள்ள ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த சீமா அவருடைய கிராமத்தில் 8-ம் வகுப்பிற்கு மேல் படித்த முதல் பெண் ஆவார். இன்றும் என்னுடைய கிராமத்தில் ஆரம்பப் பள்ளி இல்லை. நான் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க விரும்பிய போது என்னுடைய கிராமத்தில் பஞ்சாயத்தே நடத்தினார்கள். அன்றில் இருந்து அரசியலுக்கு வர வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருந்தது. என்னுடைய இலக்கு என்பது அதிக பெண்களை அரசியலுக்கு கொண்டு வருவது தான். அதன் மூலம் என்னால் கொள்கைகளை உருவாக்கவும் அதனை செயல்படுத்தவும் முடியும் என்றும் கூறினார் சீமா.
ஹத்ராஸ் மற்றும் டெல்லி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சீமாவின் அரசியல் நிலைப்பாடு குறித்து பேசும் போது அவருடைய முடிவுக்கும் வழக்குகளில் வாதாடியதிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.
இதனை நாங்கள் இணையம் மூலம் தெரிந்து கொண்டோம். அவர் இது குறித்து எங்களிடம் கூறவில்லை. ஆனாலும் அது பரவாயில்லை. வழக்கு தொடர்பாக அவர் தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் உள்ளார். நாங்கள் அவரை நம்புகின்றோம். இன்னும் ஒரு வாரத்தில் பேசுவோம் என்று நினைக்கின்றோம். நிறைய சாட்சியங்களை விசாரிக்க இருக்கின்ற காரணத்தால் இந்த வழக்கு விசாரணை தள்ளிப்போகிறது என்று ஹத்ராஸ் நிகழ்வில் கொல்லப்பட்ட பெண்ணின் சகோதரர் கூறினார்
டெல்லி கூட்டுப் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, எங்கள் வழக்கில் எங்களுடன் ஜூனியர் வழக்கறிஞராக சீமா நீண்ட காலம் பணியாற்றினார். எங்களின் மிகப்பெரிய ஆதரவுகளில் அவரும் ஒரு பங்காக இருந்தார். எங்களுக்கும் அவரின் அரசியல் முடிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறினார் அவர்.
source https://tamil.indianexpress.com/india/hathras-rape-cases-lawyer-seema-kushwaha-says-saw-how-dalits-oppressed-401667/