திங்கள் (17 1 2022) கிழமை அன்று அமீரகத்தில் உள்ள அபுதாயில் அமைந்திருக்கும் மூன்று பெட்ரோல் டேங்குகள் மீது ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என 3 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு இந்தியர்கள் உட்பட 6 பேர் இந்த தாக்குதலில் கடுமையான காயம் அடைந்துள்ளனர்.
ஈரான் நாட்டில் உள்ள ஹவுத்தி கலககாரர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். அவர்களின் இலக்கு இந்தியர்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஹவுத்தி ராணுவ செய்தித் தொடர்பாளர் ப்ரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சரீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஏமனுக்கு எதிராக அமீரகத்தின் ஆக்கிரமிப்பு விரிவாக்கம் தொடரும் வரை ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பற்றதாகவே இருக்கும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
ஏமன் செங்கடல் மற்றும் ஏதென் வளைகுடா சந்திப்பில் அமைந்துள்ளது. அதன் கடற்கரை பாப் அல்-மண்டாப் ஜலசந்தியின் ஸ்ட்ரேடஜிக் கட்டளை மையமாக செயல்படுகிறது. 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அந்நாடு முழுமையாக சிதைந்துள்ள்ளது. தற்போது அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் தலைநகரம் சனா உள்ளிட்ட பகுதிகளை ஹவுத்தி கட்டுப்படுத்தியுள்ளது.
இந்தப் போரில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல நாடுகள் ஈடுபட்டுள்ளன, மேலும் அபுதாபியில் நடந்த தாக்குதல், ஏமன் மற்றும் இதர பிராந்தியங்களில் நடைபெறும் பல்வேறு மோதல்களாஇ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
யார் இந்த ஹவுத்திகள்? ஏமன் நாட்டில் ஏன் தற்போது போர் நடைபெற்று வருகிறது?
ஏமன் நாட்டின் வடமேற்கு பிராந்தியமான சாதா பகுதியில் பிரபலமடைந்த ஸைதி சியா பிரிவை சேர்ந்தவர்கள் ஹவுத்திகள். ஏமன் நாட்டின் மக்கள் தொகையில் 35% பேர் ஹவுத்திகள் ஆவார்கள்.
1962ம் ஆண்டு வரை ஏமன் நாட்டினை ஸைதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பிறகு உள்நாட்டு போர் உருவானது. அந்த போர் 1970 வரை நீடித்தது. அரசால் நிதியளிக்கப்பட்ட சலாஃபிஸ்ட்டுகளின் வளர்ச்சிக்கு எதிராக தொடர்ந்து, 1980களில் இருந்து ஸைதி பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் ஹவுத்தி மரபினர்.
ஏமன் நாட்டு அரசுக்கு எதிராக 2004ம் ஆண்டில் ஒரு கிளர்ச்சி இயக்கத்தை துவங்கினார்கள் ஹவுத்திகள். அந்த ஆண்டு செப்டம்பரில் ஏமன் பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட அரசியல், இராணுவ மற்றும் மதத் தலைவர் ஹுசைன் பத்ரெடின் அல்-ஹவுத்தியின் பெயரால் இந்த இயக்கம் பெயரிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஏமனின் சன்னி அரசுக்கும் ஹவுத்திகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் அரங்கேறி வருகிறது.
1990ம் ஆண்டு முதல் ஏமனின் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலேஹ் 2012ம் ஆண்டு அராப் ஸ்பிரிங்க் போராட்டங்களுக்கு பிறகு பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரை தொடர்ந்து துணை அதிபராக செயல்பட்டு வந்த அப்துல் ரப்பு மன்சூர் ஹாதி அதிபராக பதவி ஏற்றார்.
2015ம் ஆண்டு ஹாதிக்கு எதிராக, சலேஹ் ஹவுத்திகளுடன் இணைந்தார். அதன் பின்னர் சன்னிகள் உட்பட ஏமன் பொதுமக்களின் ஆதரவைப் பெற்ற கிளர்ச்சி மூலம் தலைநகரம் சனா கைப்பற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அதிபர் ஹாதி ஏதென் சென்று பிறகு சவுதி அரேபியாவிற்கு சென்றார். அதன் பின்னர் தன்னுடைய பெரும்பாலான நாட்களை அவர் அங்கே செலவிட்டு வருகிறார்.
ஆனாலும் கூட 2017ம் ஆண்டு ஹவுத்தி கூட்டணியில் இருந்து வெளியேறிய சலேஹ், ஹவுத்திகளின் எதிராளிகளான சவுதிகள், அமீரகம் மற்றும் ஹாதியுடன் இணைந்து கொண்டார். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி மற்றும் அமீரகம் எந்த போரில் எப்படி ஈடுபட துவங்கின?
ஹாதி அதிகாரத்தில் ஏறிய உடனே, மார்ச் 2015ம் ஆண்டின் போது , சவுதி அரேபியா தலைமையிலான 9 கூட்டணி நாடுகள், அமெரிக்காவிடமிருந்து தளவாட மற்றும் உளவுத்துறை ஆதரவைப் பெற்று, ஹவுத்திகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட துவங்கியது. வான்வெளி தாக்குதல்களுக்கு ஹாதியின் படைகள் ஆதரவை வழங்கின. அப்போது ஹாதி, ஹவுத்திகளின் பிடியில் இருந்து சனாவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
ஆனாலும் கூட இந்த போரின் அடிப்படையில், ஈரான் மற்றும் சவுதிக்கு இடையேயான அதிகாரப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ரியாத் மற்றும் மேற்கத்திய நாடுகள் பலவும், டெஹ்ரானில் உள்ள ஆட்சியாளர்களின் உதவியால் ராணுவ மற்றும் நிதி ஆதரவை ஹவுத்திகள் பெறுகின்றனர் என்று நம்பின.
சவூதி அரேபியா ஏமனுடன் 1,300 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஆரம்பத்தில், ரியாத் போர் ஒரு சில மாதங்களில் முடிந்துவிடும் என்று கூறியது. ஆனாலும், அன்றிலிருந்து கூட்டணி மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தை மட்டுமே அடைந்துள்ளது. சனாவில் ஹவுத்திகளின் அதிகாரம் இன்னும் உள்ளது. மனிதாபிமான பேரழிவுகள் தொடர்ந்து ஏமனில் அரங்கேறி வருகின்றன.
2015ம் ஆண்டு முதல் போர் தன்னுடைய தன்மையை மாற்றிக் கொண்ஏ வருகிறது. இந்த போரின் பங்கேற்பாளர்கள் தங்களின் ஆதரவை தொடர்ந்து சவுதியால் ஆதரிக்கப்பட்டு வரும் குழுவான பாப்புலர் ரெசிஸ்டன்ஸ் குழு மற்றும் ஈரான் நாட்டால் ஆதரிக்கப்படும் குழு என்று மாற்றிக் கொண்டே வருகின்றனர். மேலும் , ஐ.எஸ்., அல்கொய்தா போன்ற இஸ்லாமிய போராட்டக் குழுக்களின் பல்வேறு அமைப்புகளுக்கு இடையிலும் தங்களின் ஆதரவை பங்கேற்பாளர்கள் மாற்றிக் கொண்டு வருகின்றனர்.
அதனால் தான் அமீரகத்தை ஹவுத்திகள் இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடத்துகின்றனரா?
அமீரகத்தில் தீவிரமான தாக்குதல்களை நாங்கள் துவங்கியுள்ளோம். ஆக்கிரமிப்பு நாடுகள் இது போன்று மேலும் பல வேதனையான தாக்குதல்களை சந்திக்கும் என்று பிரிகேடியர் ஜெனரல் சாரீ கூறியுள்ளார்.
ஹவுத்தியால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள அல் மசிராஹ் தொலைக்காட்சியில் 5 பல்லிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஏராளமான ட்ரோன்கள் துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்கள், அபுதாபியில் உள்ள முசாஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பிற வசதிகளை குறிவைத்த “ஆப்பரேஷன் ஹரிக்கேன் ஏமன்” நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
2019ம் ஆண்டில் இருந்து நேரடியாக ஹவுத்திகளை தாக்குவதை அமீரகம் குறைத்துக் கொண்டது. ஆனாலும் கடந்த சில மாதங்களாக அமீரகத்தால் ஆதரிக்கப்பட்ட குழுக்கள் ஹவுத்திகளுக்கு எதிராக தங்களின் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த தாக்குதல்களுக்கு ஹவுத்திகள் பொறுப்பேற்க முயன்றனர். இறுதியாக 2018ம் ஆண்டு இப்ப்படி ஒரு பொறுப்பேற்றனர். எமிராட்டி அதிகாரிகள் அந்த முந்தைய கூற்றுக்களை மறுத்தாலும், நாட்டின் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று, இந்த தாக்குதல்களுக்கு ஹவுத்தி போராளிகள் தான் காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளது.
அமீரகத்தைக் காட்டிலும் ஹவுத்திகளால் அதிகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பது ஹவுத்திகள் தான். 2016ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஏவுகணைகளை சவுதி ராணுவம், விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகளில் ஏவியது. நிறைய சவுதி ராணுவத்தினர் இதில் கொல்லப்பட்டனர். கடந்த வருடத்தில் மாரிப் மாகாணத்தை கையகப்படுத்த இரு தரப்பினரும் ஒரு பதட்டமான போரில் ஈடுபட்டனர். மரிப் என்பது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அமைந்திருக்கும் ஒரே ஒரு வடக்கு மாகாணம் ஆகும் . இங்கே எண்ணெய் கிணறுகள் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள் அதிக அளவில் உள்ளன.
திங்கட்கிழமை தாக்குதலைத் தொடர்ந்து, சனா மற்றும் மாரிப் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், நூற்றுக்கணக்கான ஹவுத்திகளை கொன்றதாகவும் சவுதி கூட்டணி அறிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/explained/houthis-and-the-war-in-yemen-in-which-indian-lives-have-now-been-lost-399564/