28 1 2022 முதலில் சில பொறுப்பு துறப்புகள். இந்த கட்டுரையானது பெருந்தொற்றின் தற்போதைய போக்கு, வளர்ந்து வரும் அறிவியல் ஆகியவற்றின் அடிப்படையில் எப்படி பெருந்தொற்று வெளியேறும் என்தற்கான நிபுணத்துவம் சாராத கண்ணோட்டமாகும். இரண்டு ஆண்டு கால வலி மற்றும் பாதிப்புக்குப் பின்னர் நேர்மறையான அம்சங்களை முன்னிலைப்படுத்துவது, சில நம்பிக்கைகளை அளிப்பது என்பது மட்டுமே இதன் எண்ணமாகும். எனினும், கொரோனா தொற்றின் ஒமிக்ரான் வகையானது தீங்கு தரக்கூடிய உருவமாற்றம் கொண்டதல்ல என்ற பொருளை இது கட்டமைத்து விடக் கூடாது.
டெல்டா வகை தொற்றை விடவும் இந்த வகை தொற்று லேசான துன்பத்தைத் தரக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம். கோவிட் 19- என்பதானது எந்த வகையிலும் ஜலதோஷத்தைக் கொண்டிருக்காது என்று சொல்லப்படவில்லை.. பெருந்தொற்று குறையும் வரை அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் (முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல்) அவசியம் கடைபிடிக்க வேண்டும். இப்போது, நம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் இரண்டு முக்கிய கேள்விகளுக்கான தீர்வுகளைப் பார்க்கலாம். எவ்வளவு காலத்துக்கு இந்த பெருந்தொற்று நீடிக்கப்போகிறது? அதன் பின்னர் என்ன நடக்கப்போகிறது?
சில வல்லுநர்கள், 1918ம் ஆண்டின் பெரும் காய்ச்சல் பெருந்தொற்றின் போது வீசிய கடைசி அலை(வெளியேறுதல்)யுடன் இப்போதைய ஒமிக்ரான் வகை அலையை ஒப்பீடு செய்து பார்க்கின்றனர்., சார்ஸ்-கோவ்-2 (SARS-CoV-2) லேசான மாறுபாட்டுடன் படிப்படியாக உருமாற்றம் பெற்று இந்த பெருந்தொற்றானது முடிவுக்கு வரக்கூடும் என்பதுதான் இதன் உட்பொருளாகும். இந்த அனுமானத்துக்குப் பின்னுள்ள அறிவியலைப் பார்க்கலாம்.
இயற்கை தேர்வில் இது ஒரு எளிமையான காரணமாக இருக்கிறது. இந்த பெருந்தொற்று காலகட்டதில் உதாரணமாக,அதிக பரவும் தன்மை கொண்ட அல்பா வகை தொற்றானது, அசல் திரிபை இடமாற்றம் செய்து விட்டது. அதன் பின்னர், வந்த டெல்டா வகை கொரோனாவானது, முந்தைய வகை கொரோனாவை இடமாற்றம் செய்து விட்டது. இரண்டு ஆண்டுகால பெருந்தொற்று காலகட்டத்தில் விஷயங்கள் மாறி விட்டன. மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இப்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டோ அல்லது தொற்றால் முன்பு பாதிக்கப்பட்டோ வரைஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். உதாரணமாக இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 70 சதவிகிதம் பேர் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் சிலர் தங்களுக்கு நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்ததன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர்.
ஆகையால், இந்த நிலையில்,இந்த பிறழ்வுகள், நன்மை கொண்ட வைரஸ் ஆக ஒரு பரிணாமத்தை அடைந்து ஒருவர் நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்க உதவுகின்றன. ஒருவருக்கும் மேற்பட்டு மேலும் அதிகம் பேருக்கு பரவுவதாக மாறுகிறது. அதே சமயம், இயற்கைத் தேர்வில் மற்றொரு முக்கியமான அழுத்தம் தொடர்ந்து விளையாடுகிறது.உருமாற்றம் பெற்ற தொற்றானது மனிதர்கள் பாதகமான சூழலில் இருக்கும்போது, இதர மனிதர்களை தொற்றுவதற்கு குறைவான சாத்தியங்களைக் கொண்டிருக்கும்போது அவர்களை சீராக பலவீனப்படுத்தவோ அல்லது கொல்லவோ செய்கின்றன.இன்னொருபுறம், உருமாற்றம் பெற்ற தொற்று வகையானது லேசான ஆரோக்கிய குறைவை ஏற்படுத்துகின்றன. (அல்லது எந்த ஒரு அறிகுறியும் இன்றி உள்ளன) வைரஸை திறம்பட பரப்பக்கூடிய மனிதர்களிடம் இது உருவாகுகிறது. ஒமிக்ரான் மாறுபாட்டின் தோற்றம், இத்தகைய நிகழ்வுகளைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
இதுவரை மிகவும் நன்றாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் ஏற்படும் பிறழ்வுகள், தீவிர தொற்றை உருவாக்கும் உருமாற்ற வகையை உற்பத்தி செய்வதாக இருக்காது என்பது நமக்கு எப்படித் தெரியும்? எனினும், நம்மால் நிச்சயமாக சொல்ல முடியாது. பிறழ்வுகள் தற்செயலான நிகழ்வுகளாகும். ஒரு மில்லியன் பக்கங்களைக் கொண்ட பகடையை உருட்டுவதைப் போன்றது -இருப்பினும் நம்பிக்கையிருக்கிறது.
ஏன் இது நடைபெறாது என்பதற்கு இரண்டு பரந்த காரணங்கள் உள்ளன. முதலாவது மக்கள் தொகையில் பெரும்பாலானோர் ஒரு தடுப்பூசியாவது (முந்தைய கொரோனா வகை தொற்றுகள் மற்றும் தடுப்பூசிகள் காரணமாக) செலுத்தியிருக்கின்றனர். வைரஸுக்கு எதிராக போராடும் திறன் படிப்படியாக மேம்படும். அதன் விளைவாக தீவிர குறைவான உடல் நல கோளாறுகள் ஏற்படும். பிற பருவகால கொரோனா வைரஸ்களுடன் முந்தைய தொற்றுகள் சார்ஸ்-கோவ்-2 க்கு எதிராக சில பாதுகாப்பை வழங்குகின்றன என்பதை நாம் உணரத் தொடங்கினோம்,வைரஸில் உள்ள குறிப்பிட்ட புரதங்களை குறைவாக சார்ந்து இருக்கும் பொதுவான நோயெதிர்ப்பு மறுமொழிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன..
கூடுதல் பிறவுகள் வைரஸுக்கான மதிப்பீட்டில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்பது இரண்டாவது காரணமாகும்.நோயெதிர்ப்பு தவிர்ப்பை ஏற்படுத்தும் பிறழ்வுகள் வைரஸின் ஒப்பீட்டளவில் சிறிய பகுதியின் கட்டமைப்பை உள்ளடக்கியதாக இருக்கும் போது (இந்த விஷயத்தில் ஒரு மெல்லிய புரதம்) அதன் ஒரு பகுதி நோய்த்தொற்றுக்கான திறனுக்கும் பொறுப்பாகும்.உதாரணமாக, ஒமிக்ரான் வகையின் ஒட்டு மொத்த பிறழ்வுகளானது, மெல்லிய புரதத்தால் பாதிக்கப்பட்டது. அதன் முந்தைய தொற்று பாதிப்புகளைப் போல நுரையீரல் செல்களை தொற்றும் அளவுக்கு திறன் வாய்ந்ததாக இல்லை என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.
டெல்டா தொற்றோடு ஒப்பிடும்போது ஒமிக்ரான் தொற்று பாதித்தோர் இறப்பதற்கான 70 சதவிகிதம் குறைவான சாத்தியத்தை கொண்டது என்பதை சில ஆரம்பகட்ட ஆய்வு முடிவுகள் விளக்குகின்றன. சுருக்கமாக, இதன் இலக்கு பிராந்தியம் சிறியதாக இருக்கிறது என்பதால், சாத்தியமான பிறழ்வுகளின் எண்ணிக்கையில் தடைகள் இருக்கலாம். இது நோயெதிர்ப்பு தவிர்ப்பு, பரவுதல் மற்றும் தீவிர நோயை ஏற்படுத்தும் திறனை உறுதி செய்யும்.
பெருந்தொற்று முடிவுக்கு வந்த பிறகு என்ன நடக்கும். இது இன்னும் பெரிய யூகங்களுக்கு உட்பட்டதாகும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் அல்லது தொற்று பாதிப்பு ஏற்பட்டபோதிலும் வாழ்க்கை முழுவதற்குமான பாதுகாப்பை நாம் கொண்டிருக்கப்போவதில்லை என்பது ஏற்கனவே தெளிவாகி விட்டது. எதிர்ப்பு சக்தியை மீறி இந்த வைரஸ் ஆனது தொடர்ந்து பிறழ்வுகளை கொண்டிருக்கும் என்பதை தகுந்த காரணங்களுடன் எதிர்பார்க்க முடியும்.
பல்வேறு விரும்பத்தகாத காட்சிகளில் ஒரு நம்பிக்கையாக (ஒருவேளை வாய்ப்புகள் உள்ளது) இந்த வைரஸ் தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும் ஆனால், எதிர்ப்பு சக்தியில்லாத மக்களிடம் மட்டும் தொற்றை ஏற்படுத்தும். பெருந்தொற்றுக்கு பின்னர் பிறக்கும் குழந்தைகள், முதியோர் அல்லது நோய் எதிர்ப்பு குறைந்தோரிடம் தொற்றை ஏற்படுத்தும். பாதிக்கப்படக் கூடிய இந்த தனிநபர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் தேவைப்படலாம்.1918ம் ஆண்டு பெருந்தொற்று காய்ச்சலுக்குப் பின்னர், இந்த வைரஸ் இப்போது பருவகால காய்ச்சலாக பாதிப்பு ஏற்படுத்துகிறது. என்ன நடந்தது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது.
எதிர்வரும் ஆண்டுகள், மாதங்களில் என்னமாதிரியாக இது வெளிப்படும் என்பதான கணக்கீடு, அதீதமான நம்பிக்கையாக இருக்கும் என்று சந்தேகத்துக்கு இடமின்றி சிலர் கருதக்கூடும். பெருந்தொற்றின் இப்போதைய தருணத்தில் இது சாத்தியமுள்ள காட்சி என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் வாயிலாக உலகம் முழுவதும் புதிய தொற்று எண்ணிக்கையை நாம் அவசியம் கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான், புதிய மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையிலான தொற்று தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறையும். இந்த புதிய ஆண்டில் நாம் ஆசைப்படுவது இது ஒன்றுதான்.
இந்த பத்தி முதலில் கடந்த 21ம் தேதியிட்ட அச்சு இதழில் ‘In sight, the virus’s exit’ என்ற தலைப்பில் வெளியானது. கார்த்திகேயன், புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் இதயவியல் துறை பேராசிரியராக இருக்கிறார். கட்டுரையின் கருத்துகள் அவரது சொந்தக் கருத்துகளாகும்.
தமிழில் கார்மேகம் பாலசுப்ரமணி
source https://tamil.indianexpress.com/opinion/omicron-the-beginning-of-covids-endgame-403144/