வியாழன், 27 ஜனவரி, 2022

பளபளக்கும் சருமத்துக்கு ஹோம்மேட் ஃபேஸ் பேக்- எப்படி பயன்படுத்துவது?

 இயற்கை அழகு பொருட்களை உங்கள் சருமத்தில் ஏன் பயன்படுத்தக்கூடாது?

கடலை மாவு

இது குளூட்டன் இல்லாதது, எனவே இது கோதுமைக்கு சிறந்த மாற்றாகும்.

இதில் நல்ல புரதம் உள்ளது.

கிளைசெமிக் இன்டெக்ஸ் (glycemic index) குறைவாக உள்ளது, அதாவது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது அதாவது உடலின் கொழுப்பின் சதவீதத்தை கட்டுப்படுத்துகிறது.

இது ஒரு கிளீன்சிங் ஏஜண்டாக செயல்படுகிறது மற்றும் வறண்ட சருமத்துக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது.

தயிர்

தயிர் ஒரு புரோபயாடிக், குடலை வலிமையாக்குகிறது

லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, இது நல்லது.

இதில் நல்ல அளவு கால்சியம், பி-12 மற்றும் வைட்டமின் டி உள்ளது.

இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள்’ முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு நல்லது. எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு பயன்படுத்தலாம். இது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.

தேன்

இது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட சிறந்தது, இரத்த அழுத்த அளவைக் குறைக்கிறது, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு நிறைந்தது.

ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால், தோலில் உள்ள அனைத்து பாக்டீரியா மற்றும் கிருமிகளையும் நீக்குகிறது. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இது முகப்பருவால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.

ஒரு கிருமி நாசினியாக, இது சருமத்தை குணப்படுத்துகிறது.

இது ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர்.

ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

ஒரு சிறிய கப் கடலை மாவு, தயிர் மற்றும் சில துளிகள் தேன்’ மூன்றும் ஒரு மென்மையான பேஸ்ட் ஆகும் வரை கலக்கவும்.

அதை உங்கள் முகம், கழுத்து, காதின் பின்பகுதி ஆகிய இடங்களில் 10-15 நிமிடங்களில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.

இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது, கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தயிர், கடலை மாவில் உள்ள நார்ச்சத்துடன் இணைந்து இறந்த செல்களை அகற்றி, சருமத்திற்கு அடியில் பளபளப்பை மீட்டெடுக்கும். தேன் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. கடலை மாவு, சரும துளைகளை அவிழ்க்க உதவுகிறது, இது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

source https://tamil.indianexpress.com/lifestyle/gram-flour-curd-honey-homemade-face-mask-for-healthy-skin-402954/