புதன், 19 ஜனவரி, 2022

நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி: சென்னை குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 18 1 2022 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி, சென்னை குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தவித காரணமும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பாதுகாப்புத்துறை அமைச்சரின் கடிதத்தில் எந்த காரணமும் குறிப்பிடாமல் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. விடுதலைப்போராட்டத்தியாகிகளின் தீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூறும் விதமாகவே தமிழக ஊர்தி வடிவமைக்கப்பட்டது.

ஆங்கிலேயே வல்லாதிக்க எதிர்ப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நாட்டுப்பற்றிலும், விடுதலை வேட்கையிலும், தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும்விதமாக முக்கிய நகரங்களுக்கு அலங்கார ஊர்தி பயணப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி பயணப்படும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில், தெரிவித்திருக்கிறார்.

source https://news7tamil.live/discarded-decorative-vehicle-displayed-at-the-republic-day-parade-in-chennai-chief-minister-mk-stalin.html