செவ்வாய், 18 ஜனவரி, 2022

இதேமாதிரி ஒரு சம்பவம் சிந்தியானு ஒரு நாட்டுல நடந்துச்சு

 8 1 2022 பிரபல தமிழ் டிவி சேனலில், குழந்தைகள் மட்டும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ரியாலிட்டி ஷோ ஒன்றில், மோடி அரசு செயல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கலாய்த்து, சிறுவர்கள் நாடகம் ஒன்று செய்துள்ளனர்.

அதில் ஒரு சிறுவன், வடிவேலுவின் பிரபல இம்சை அரசன் போல வேடமிட்டு, அவரது உடல்பாவனைகளுடன் பேசுகிறான்.

நாட்டின் வளர்ச்சிக்கு எது தடையாக உள்ளது? இந்த கருப்பு பணம். எல்லா பணத்தையும் செல்லாது என சொல்லப்போகிறேன். அப்படி செய்ஞ்சா கருப்பு பணம் ஒழிஞ்சிடும்ல என்று பேசுகிறான்.

அதற்கு அமைச்சர் வேஷமிட்ட மற்றொரு சிறுவன்: இதேமாதிரி ஒரு சம்பவம் சிந்தியானு ஒரு நாட்டுல நடந்துச்சு. அந்த மன்னரும் உங்களை மாதிரிதான் முட்டாள் தனமா பண்ணாரு. ஆனால் கருப்பு பணத்தை எங்க ஒழிச்சாரு. கலர் கலரா கோர்ட்டை மாத்திட்டுல சுத்துனாரு என்று கூறுகிறான்.

மேலும் அமைச்சர் வேடமிட்ட சிறுவன்: லாபத்தில் உள்ளதையும் ஏன் விற்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு மன்னன்; என்ன அமைச்சு! நீங்களும் மக்களே போலவே கேள்வி கேட்கறீர்கள்! நஷ்டத்தில் உள்ளதை வித்தால் நாம் எப்படி லாபம் பார்க்க முடியும். லாபத்தில் உள்ளதை விற்றால் தானே நாம் லாபம் பார்க்க முடியும் என்று கூறுகிறான்.

சிறுவர்களின் இந்த நாடகம் சோஷியல் மீடியாவில் ஒரு பக்கம் வைரலாக பரவி வந்தாலும், மோடி ஆதரவாளர்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

source https://tamil.indianexpress.com/entertainment/the-boys-who-criticized-pm-modi-on-the-popular-tamil-reality-show-398114/