ஞாயிறு, 23 ஜனவரி, 2022

புதிய பதவி

 22 1 2022 

தமிழக வீட்டு வசதி வாரியத்தின் தலைவாக பூச்சி எஸ்.முருகன் நியமனம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளளார். மேலும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவராக துறைமுகம் காஜா நியமனம் செய்யப்பட:டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,

அனைவருக்கும் வீட்டு வசதி என்ற குறிக்கோளை எய்தும் வகையில், உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான மக்களுக்கும், வாங்கத்தக்க விலையில் வீடுகளின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வீடுகள், சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களுக்காக பல்வேறு திட்டங்கள் வாயிலாக லட்சக்கணக்காக மக்கள் வீட்டு உரிமையாளர்களாக வேண்டும் என்ற அவர்களுடைய கனவை நனவாக்கிய பெருமைக்குரியது.

அத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக திரு.பூச்சி.எஸ்.முருகன் அவர்களை நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், அவர்கள் உத்தரவிட்டுள்ளார். திரு பூச்சி எஸ்.முருகன் அவர்கள் ஏற்கனவே திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர், விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர், தென்னிந்திய நடிகர்கள் சங்க அறக்கட்டளைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக திரு. துறைமுகம் காஜா என்கிற காஜா முகைதீன் அவர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-appointed-poochi-s-murugan-as-a-chief-of-tn-housing-board-400801/