செவ்வாய், 25 ஜனவரி, 2022

3 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை

 25 1 2022 ஒரே நாளில் 50,190 வரை குறைந்து, 3 லட்சத்திற்கும் கீழ் கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 22 லட்சத்து 36 ஆயிரத்தி 842 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில், இரண்டு லட்சத்து 55 ஆயிரத்து 874 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில், 614 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 462 ஆக
அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 753 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய
சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/less-than-3-lakh-corona-infections.html

Related Posts:

  • மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர் நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும்பிரியரா? அப்படியென்றால் இது உங்களுக்குத்தான்உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்றஇரண்டு நிமிடங்களை … Read More
  • நைட்டி அணிந்து வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ. 500 அபராதம்... மகாராஷ்டிர கிராமத்தில் அதிரடி!! … Read More
  • வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள… Read More
  • பிரபலமானவர்களின் பட்டியலில் மோடியை பட்டியலிலிருந்து நீக்கியது டைம்ஸ் : மூடி மறைத்த மீடியா...!! உலகில் பிரபலமானவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம் வழங்கி… Read More
  • பொய்யை பரப்பிய ஆர் எஸ் எஸ் தீவிரவாத மீடியாக்கள் சதி அம்பலம் . Flash News : ஆக்ரா முஸ்லிம்கள் இந்துவாக வில்லை – பொய்யை பரப்பிய ஆர் எஸ் எஸ் தீவிரவாத மீடியாக்கள் சதி அம்பலம் . ரேஷன் அட்டை கொடுப்பதாக … Read More