வெள்ளி, 28 ஜனவரி, 2022

பள்ளிகள் திறப்பு, கோயில்கள் அனுமதி; தமிழக அரசின் புதிய தளர்வுகள் எவை?

 17 1 2022 கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில், நாளை ஜனவரி 28 முதல் (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் திறப்பு, அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே போல, ஜனவரி 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், தமிழகத்தில் நாளை முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க இந்துசமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி, செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகளில் அனுமதிக்கப்பட்டவைகள்:

  • உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
  • துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உருதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உடற்பயிர்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் சேர அனுமதிக்கப்படும்.
  • உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.
  • அழகு நிலையங்கள், சலூன்கள், பியூட்டி பார்லர், சலூன்கள், ஸ்பாஸ் போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

*அனைத்து பொழுதுபோக்கு/கேளிக்கைப் பூங்காக்கள் நீர் விளையாட்டுகளைத் தவிர்த்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50% சதவிகிதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-new-covid-relaxations-schools-colleges-reopen-and-devotees-allowed-all-days-in-temples-403098/