27 1 2022 தமிழகத்தில் 4 நாட்கள் தொடர்ந்து, 30,000க்கும் மேல் கொரோனா பாதிப்புகள் பதிவான நிலையில், புதன்கிழமை இந்த எண்ணிக்கை சற்று குறைந்தது.
மாநிலத்தில் நேற்று, 29,976 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தொற்றுக்கு 47 பேர் உயிரிழந்தனர். அதேநேரம், 27,507 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்
மாநிலத்தில், தொடர்ச்சியாக 4வது நாளாக புதிய பாதிப்புகள் குறைந்தாலும், குறைந்தது 13 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது தினசரி பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
சேலத்தில் செவ்வாயன்று 1087 பாதிப்புகள் இருந்த நிலையில், நேற்று 1,457 ஆக அதிகரித்தது. அதேநேரம் திருப்பூரில் 1,490 ஆக இருந்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,787 ஆக அதிகரித்துள்ளது.
செயலில் உள்ள 2.13 லட்சம் பாதிப்புகளில், மொத்தம் 9,910 (4.6%) பேர் மருத்துவமனைகளில் உள்ளனர், அவர்களில் 1132 பேர் ICUவில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 80% படுக்கைகள் காலியாக உள்ளன.
47 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மாநிலத்தில் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,359 ஆக உயர்ந்தது. இறந்த 48 பேரில் குறைந்தது 40 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதில், இருவருக்கு எந்தவிதமான இணை நோய்களும் இல்லை.
மாநிலத்தில் புதன்கிழமை, 15 வயதுக்கு மேற்பட்ட 57093 பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் 2வது டோஸ்களை எடுத்துக் கொண்டனர். இதுவரை 2.52 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/corona-cases-increases-in-13-districts-including-salem-and-tiruppur-402711/