புதன், 12 ஜனவரி, 2022

5700 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்: ஒடிசாவில் 2 நிலக்கரி சுரங்கங்களை குறிவைக்கும் தமிழகம்!

  தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதை கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், எண்ணூர் SEZ, உடன்குடி ஸ்டேஜ் I, உப்பூர் சூப்பர்கிரிட்டிகல், வடசென்னை நிலை III மற்றும் எண்ணூர் அனல் மின் நிலையம் போன்ற மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து சுமார் 5,700 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுக்கான விரிவாக்கத் திட்டங்களை விரைவில் தொடங்க உள்ளது.

இந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி தேவைக்காக, ஒடிசாவின் ஐபி பள்ளத்தாக்கில் உள்ள மீனாட்சி நிலக்கரித் தொகுதி மற்றும் தல்சரில் உள்ள பாங்குய் நிலக்கரித் தொகுதி ஆகிய இரண்டு நிலக்கரித் தொகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் ஏலத்தில் எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வடசென்னை, மேட்டூர் மற்றும் தூத்துக்குடியில் உள்ள 4,320 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் ஒரு நாளைக்கு 62,000 டன் நிலக்கரி பயன்படுத்தி வருகின்றன.

நிலக்கரி விற்பனைக்கான 88 நிலக்கரிச் சுரங்கங்களின் ஏல செயல்முறை கடந்த அக்டோபரில் மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. 20 நிலக்கரி சுரங்கங்களுக்கான மூன்றாவது தவணையின் கீழ் 53 ஏலங்கள் அமைச்சகத்தால் பெறப்பட்டன. அவற்றில் 16 முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட சுரங்கங்கள் மற்றும் நான்கு பகுதியளவு சுரங்கங்கள்.

“ஜனவரி 7 முதல் ஏலம் நடைபெறுவதாக இருந்தது, ஆனால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி மற்றும் பாங்குய் நிலக்கரித் தொகுதிகளைப் பெறுவதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நம்பிக்கை கொண்டுள்ளது,” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு தவணைகளில் 28 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை அமைச்சகம் வெற்றிகரமாக முடித்திருந்தது. 492 ஹெக்டேர் பரப்பளவில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட மீனாட்சி நிலக்கரித் தொகுதியையும், பகுதி ஆய்வு செய்யப்பட்ட பாங்குய் நிலக்கரித் தொகுதியின் 998 ஹெக்டேரையும் தமிழ்நாடு மின்சார வாரியம் கண்காணித்து வருகிறது. ஏன்னென்றால், எண்ணூர் மற்றும் பாரதீப் துறைமுகம் வழியாக இந்த நிலக்கரி சுரங்கங்களுக்கு இடையே உள்ள தூரம் 1,200 கிமீ முதல் 1,300 கிமீ வரை ஆகும்.

2016ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட சந்திரபில்லா நிலக்கரிச் சுரங்கத்தின் மேம்பாட்டிற்கான கால அட்டவணையைத் திருத்துவதற்கு மத்திய அரசின் ஆதரவை மின்சார வாரியம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விருப்பங்களை ஆராய்ந்தாலும், சூரிய ஆற்றலில் பெரும் உந்துதலைக் கொண்டு, அதிக நிலக்கரியைத் தேடுவதற்காக பல்வேறு கட்ட செயலாக்கங்களின் கீழ் வரவிருக்கும் வெப்பத் திட்டங்களை மின் மேலாளர்கள் சுட்டிக்காட்யுள்ளனர்.

வடசென்னை மூன்றாம் கட்டம், எண்ணூர் SEZ மற்றும் உடன்குடி 1ம் நிலை திட்டங்கள் முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-news-in-tamil-tangedco-is-eying-2-odisha-coal-blocks-to-generate-5700mw-in-tn-396079/