7 3 2022
உத்தரபிரதேசத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்டங்களாக 349 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில், 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிக்கு துணை ராணுவத்தினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் உண்மையான போட்டி பாஜக-சமாஜ்வாடி கட்சிகளுக்கே உள்ளது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
source https://news7tamil.live/up-final-phase-assembly-election-start.html